ஐநா மனித உரிமை பேரவைக்கு கோரிக்கை பேரணி, பொதுக்கூட்டம்….
நாள் – 03-03-2012
கிழமை – சனிக்கிழமை
பேரணி – மதியம் மூண்டு மணி அளவில் இராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி காந்தி – இரவின் பாலத்தில் முடிவடைகிறது..
பொதுக்கூட்ட இடம் – தாணா தெரு, புரசைவாக்கம்..
இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணை நடத்த சுதந்திர பன்னாட்டுக் குழு அமைக்கவும், போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் சீமான் பேரணிக்கு முதன்மை நின்று பொதுக்கூட்டத்தில் கோரிக்கை உரையாற்றுகிறார்..
ஜெனீவாவில் மனித உரிமை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் மிக அவசியமான தருணத்தில் அவசியமான கோரிக்கையை முன்வைத்து நடைபெறும் இப்பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் அனைத்து தமிழர்களும் பங்கு பெற்று கோரிக்கைக்கு வலு சேர்க்குமாறு நாம் தமிழர் கட்சி வேண்டிக்கொள்கிறது..
திரளுவோம் திரளுவோம்!
பகை மிரளத் திரளுவோம்!!
பைந்தமிழ் இனத்தீரே!!!