தமிழன்னையின் தனையனே வாழியவே
தமிழன் என்ற இனம்
தலைகளை நிமிர்த்த
தரணியில் உதித்தான்
தானைத் தலைவன் எங்கள் கோபுர கலசம்
சிற்றலைகள் கொஞ்சி விளையாடும்
சிறப்பான வல்வை மாநகரில்
சித்தங்குளிர் திருக்கார்த்திகையில்
சிறுத்தைபுலி இவன் திசைகள் வெளிக்க உதித்தான்
கற்கின்ற போதிலும் அண்ணன்
கருதினான் தமிழரை தமிழை
கடிதென முடிவெடுத்தே
கல்வியை உதறி களமாட புகுந்தான்
ஒற்றைத் துப்பாக்கியில் ஆரம்பித்து
ஒரு பெரும் படை அமைத்து
ஒப்பரும் மிக்காருமற்ற தலைவனாய்
ஒன்றாக்கினான் ஒடுங்கியிருந்த தமிழரை
கொடிகொண்ட மன்னவனே கரிகால் சோழனே
கொடிய சிங்களமஞ்ச கோலோச்சிய கோணமலையரசே
கோமகனே எங்கள் கோல விடிவிளக்கே
கோடிமுறை சொல்வோம் வாழ்க வாழ்கவே
தமிழரின் விடி வெள்ளியே
தரணியில் இணையற்ற தலையே
தமிழன்னையின் தனையனே வாழியவே
தலைதாழ்த்தி வாழ்த்துகின்றேன் வாழியவே வாழியவே
வல்வையூரான்.
















Leave a Reply