சிறப்பு செய்திகள்

ஆறு பிள்ளைகளின் தந்தையை டோறாவால் மோதிக்கொன்றது சிங்களக் கடற்படை!

மீன்பிடித்துக் கொண்டிருந்தவரின் படகை கடற்படையின் டோறா மோதித் தள்ளியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எழுவைதீவுக் கடலில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்தச் சம்வம் இடம்பெற்றது. இதில் எழுவைதீவு நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த 06 பிள்ளைகளின் தந்தையான அன்ரனி யேசுதாசன் (வயது 60) என்பவரே உயிரிழந்தவராவார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; குறித்த மீனவர் கரையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது விரைந்து வந்த கடற்படையின் டோறா அவரின் படவை மோதித் தள்ளி விட்டு தப்பிச் சென்றது.

இதனால் மீனவர் படுகாயமடைந்தார். அத்துடன் படகும் கடுமையாகச் சேதமடைந்தது. காப்பாற்ற யாருமின்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மீனவர் தனது கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த கைபேசி மூலமாக தனது நண்பர்களுக்கு அறிவித்தார்.

அவர்கள் விரைந்து செயற்பட்டு மீனவரை மீட்டு ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் அங்கு உயிரிழ்நதார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *