சிறப்பு செய்திகள்

யாழ்.நாவாந்துறையில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயம்!

யாழ்.நாவாந்துறை பகுதியில் இன்று இரவு இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயம்.

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இலங்கை இராணுவம் இன்றிரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஓருவர் படுகாயமடைந்துள்ளார்.

நாவாந்துறையில் உள்ளுர் விளையாட்டுக்கழக உறுப்பினர்களிடையேயான தொடர் மோதலை கட்டுப்படுத்தவென கூறி படையினர் துப்;பாக்கி சூட்டினை நடத்தியுள்ளனர். இத்துப்பாக்கி சூட்டில் அதே இடத்தை சேர்ந்தவரான 30 வயதுடைய சந்திரகுமார் சண்சிவன் என்பவரே காயமடைந்துள்ளார்.

வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த இவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த போதும எந்தவொரு மோதல் சம்பவத்துடனும் தொடர்பு அற்றவரென கூறப்படுகின்றது.

இந்நிலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட அவரை வழிமறித்து படையினர் மீண்டும் தாக்கியதாகவும் அத்துடன் அவரை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றிருந்தவர்களையும் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த இளைஞனை கைது செய்த படையினர் மேலதிக விசாரணைக்கென அழைத்து சென்று பின்னர் விடுவித்திருந்ததாக தெரியவருகின்றது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *