முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழையை அடுத்து 52 கிராம அலுவலகர் பிரிவுகளில் 5,583 குடும்பங்களைச் சேர்ந்த 19,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் இன்று தெரிவித்தார்.
இவர்களில் 503 குடும்பங்களைச் சேர்ந்த 1,721 பேர் இடம்பெயர்ந்த நிலையில் தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மழை காரணமாக இடம்பெயர்ந்தவர்கள்; கொக்குத்தொடுவாய் மேற்கு மற்றும் கிழக்கு, இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் கிழக்கு, மந்துவில், மல்லிகைத்தீவு ஆனந்தபுரம், திருமுறிகண்டி, சிராட்டிகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த பிரதேச செயலகங்கள் ஊடாக சமைத்த உணவு வழங்கப்பட்டுவருகின்றன.
மழை தொடர்ந்து பெய்துவருவதால் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரி