இன்றைய நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காக விடாது குரல் கொடுத்த வருகின்ற கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகும்.இந்த விடயத்தில் மறு பேச்சுக்கே இடமில்லை.
ஆனாலும் கூட்டமைப்பின் மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நாங்கள் சற்று உற்று நோக்க வேண்டும்.அதில் பிரதானமாக பல்வேறு தரப்பினராலும் கூட்டமைப்பில் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதாவது கூட்டமைப்பில் உள்ள பழைய தலைவர்கள் சற்று விலகி புதிதாக வருகின்ற இளைய தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என்பதே அதுவாகும். எங்களது தமிழ் சி.என்.என் இணையத்தளத்தின் ஊடாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலமும் தமிழ் மக்கள் இந்த விடயத்தை தெளிவாக வலியுறுத்தியுள்ளார்கள்.
அதில் அறுபது வீதத்துக்கும் மேலான மக்கள் இளைய தலைமுறையினரை கட்சியினுள் உள்வாங்குவதுடன் அதற்கு கூட்டமைப்பின் அனுபவம் மிக்க தலைவர்கள் வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.
இளைய சமுதாயம் தமிழ் மக்களோடு களத்தில் நின்று பணியாற்ற வேண்டிய தேவை இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.
துடிப்போடு மக்கள் பணியாற்ற சிறந்த தெரிவு புதிய இளைஞர் அணி ஒன்றை கூட்டமைப்பினுள் உள்வாங்கி செயற்படுவது தான்.
கூட்டமைப்பின் பழைய தலைவர்கள் எல்லோரும் புதிய இளைய தலைமுறைக்கு இது வரை பெற்ற தங்களது அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக மீட்சி பெற வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இளைய தலைமுறை உள்வாங்குவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை.
மாறி வரும் உலக ஒழுங்குக்கு ஏற்ப கூட்டமைப்பும் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கு இந்த மாற்றங்கள் பெரிதும் பயன் உள்ளதாக அமையும்.
உத்வேகத்தோடு களப்பணியாற்றக் கூடிய இளைஞர்களின் மிகப் பெரிய வெற்றிடம் கூட்டமைப்பில் உள்ளதை தமிழ் மக்கள் உணர்ந்ததைப் போல அதன் தலைவர்களும் உணர்வார்களா?
Previous Postவல்வை சழூகசேவையாளர்கள் இருவருக்கான பொது வரவேற்பு
Next Post பரிதியின் சாவு சொல்லும் செய்தி-காசியானந்தன்!