Search

ஐரோப்பிய குழுவினர்

புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்பி அனுப்புவதை பிரித்தானியா மீள் பரிசீலனை செய்யவேண்டும் என யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் ஸ்ரொக்டன் தெற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன், ஜரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சின் அரசியல் விவகாரப் பணிப்பாளர் மக்ஸ்வெல் கீகெல், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கிறிஸ் நொநிஸ் ஆகியோர் யாழ். ஆயர் இல்லத்துக்கு சென்ற போதே இக்கோரிக்கையை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரிடம் ஆண்டகை அவர்கள் முன்வைத்துள்ளார்.

இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக தமிழ் மக்களால் தேர்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளுடனம் சிறிஙல்கா அரசு இதய சுத்தியுடன் பேசவேண்டும் என குறிப்பிட்ட ஆண்டகை அவர்கள் தமிழ் மக்கள் அரசியல் தீர்வைத்தான் எதிர்பார்கிறார்கள். அவர்களது விருப்பமும் அதுவாகத்தான் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால யுத்தத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் மனதில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு யுத்தத்தில் ஈடுபட்டவர்களிடம் இருக்கிறது என மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஐரோப்பிய குழுவினர் நேற்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர்கோத்தபாய ராஜபக்வினையும் சந்தித்து உரையாட்டியுள்ளனர்.

இச்சந்திப்பின்போது, பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன், ஜரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சின் அரசியல் விவகாரப் பணிப்பாளர் மக்ஸ்வெல் கீகெல், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கிறிஸ் நொநிஸ, யாழ். மாவட்டச் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *