கடந்த ஞாயிற்றுக்கிழமை 22/01/2012 அன்று இடம்பெற்ற இரண்டாம் சுற்றின் இறுதிப்போட்டியில் வல்வை புளூஸ் அணி ஈஸ்ட் லண்டன் எலைட் அணியை எதிர்த்து மோதியிருந்தது. இப்போட்டி 1 -1 என்ற கோல்களின் அடிப்படையில் வெற்றி தோல்வியின்றி முடிந்தது. இந்த அணியுடன் முதலாம் சுற்றில் புளூஸ் அணி 2 -1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இடைவேளைக்கு முதல் வல்வை புளூஸ் அணி சாம் போட்ட கோலைத்தொடர்ந்து 1 -0 என்ற வித்தியாசத்தில் முன்னியில் நின்றது. ஆட்டம் முடிவதற்கு 2 நிமிடங்கள் இருக்கும் நிலையில் ஈஸ்ட் லண்டன் எலைட் விளையாட்டுக் கழகம் ஒரு கோலைப்போட்டது.
இப்போடியில் வல்வை புளூஸ் ஒரு புள்ளியை மட்டுமே பெற்று, இரண்டாம் இடத்திலும் மூன்றாம் இடத்திலும் சம புள்ளியில் இருந்த நோர்த் வெஸ்ட் கழகம் மற்றும் சுபன் விளையாட்டுக் கழகமும் தலா மூன்று புள்ளிகளை பெற்று வல்வை புலூசிட்கும் தங்களுக்கும் இடையே உள்ள புள்ளி வித்தியாசத்தை ஏழாக குறைத்துள்ளனர். மூன்றாம் சுற்றில் வல்வை புளூஸ் அணி எட்டு புள்ளிகளை பெற்றால் இந்த லீக்-ஐ வெற்றி பெற்று அடுத்தவருடம் பிரிமியர் பிரிவில் விளையாடுவதற்கு தகுதி பெறும்.
செய்திகள்: ஆதவன்