Search

தமிழ்நாட்டில் சிங்களத்தின் சுதந்திர தினமா ? தமிழின உணர்வாளர்கள் கண்டிப்பு!

தமிழ்நாட்டில் சிங்களத்தின் சுதந்திர தினமா ? தமிழின உணர்வாளர்கள் கண்டிப்பு!

இலங்கையின்  64 ஆவது சுதந்திர தினத்தை தமிழனாடிலும் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நீண்ட நாள் நட்பு வலுவடைய மேற்படி சுதந்திர தின விழா அமையுமென்று சென்னை மஹா போதி நிலையத்தின் பீடாதிபதி கலவானே மஹநாம தேரர் குறிப்பிட்டார்.

கடந்த 12 ஆண்டு காலமாக சென்னையில் சிறீலங்காவின் சுதந்திர தின நிகழ்வுகள் மஹாபோதி நிலையத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இம் முறையும் சிறீலங்காவின் சுதந்திர தினத்தை சென்னையில் நடாத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

சென்னையில் எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாக உள்ள இலங்கையின் 64ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் உள்நாட்டு கலை, கலசார பாரம்பரிய நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன. அத்தோடு இசை நிகழ்ச்சி மற்றும் மத வழிபாடுகள் நடைபெற உள்ளதுடன் இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு உரையாற்ற உள்ளார் எனவும் கூறினார்.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள் தாமும் சிறீலங்காவின் 64ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பான விழாவிற்கு எதிர்ப்புக்காட்டல்களை செய்வதற் தயாராகி வருவதாக தெரிவித்ததோடு, ‘இலங்கைப் பொருள்களைப் புறக்கணிப்போம்’ என்ற அமைப்பு மேற்கொண்ட தீவிர பிரசாரங்களை அடுத்து சிங்களத்துப் பொருட்களை கடைகளின் முன்பாக உள்ள அலுமாரிகளில் காட்சிக்கு வைப்பதில்லை என்ற முடிவையும் சுட்டிக்காட்டினார்.

தமிழன் மண்ணில் தமிழனைக்கொன்ற கூட்டங்களின் கழியாடட்டங்களுக்கு தமிழகம் ஒருபோதும் இடம் கொடுக்காது என மேலும் தெரிவித்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *