ராமேஸ்வரம்: தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் பாம்பன் பகுதி நாட்டுப்படகு மீனவர்களும், சிறு தொழில் மீன்பிடித் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த வேலை நிறுத்தத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட இரட்டை வலை, சுருக்கு வலை உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் மீன் வளம் அழிந்து வருவதாகவும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இரட்டை வலை, சுருக்கு வலை உள்ளிட்ட வலைகளை கடந்த 2000- ம் வது ஆண்டு தமிழக அரசால் தடைசெய்யப்பட்டது குறிப்புடத்தக்கது.