இலண்டனில் இவ்வாரம் ஈழத்தமிழ் போராட்டவாதிகள் மீது சிங்கள இனவெறியர்கள் நிகழ்த்திய காடைத்தனத்திற்குப் பதிலடியாக வேல்ஸில் இன்று நடைபெற்ற இந்திய – சிறீலங்கா துடுப்பெடுத்தாட்டப் போட்டியின் பொழுது மைதானத்தின் மையப்பகுதிக்குள் அதிரடியாக புலிக்கொடியுடன் பாய்ந்த மானத்தமிழன் ஒருவர், கொடியைப் பறக்கவிட்டவாறு மைதானத்தைச் சுற்றி வலம் வந்துள்ளார்.
இதனால் சிறீலங்கா துடுப்பெடுத்தாட்ட அணியின் ஆட்டம் சில நிமிடங்கள் தடைப்பட்டதோடு, புலிக்கொடியுடன் பாய்ந்த மானத்தமிழனை உற்சாகப்படுத்தி மைதானத்தின் பார்வையாளர் பகுதியில் தமிழீழ தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு நின்ற ஈழத்தமிழ் உறவுகள் ஆராவாரித்துள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக அங்கு நின்ற இந்திய துடுப்பெடுத்தாட்ட ரசிகர்கள் சிலரும் குரலெழுப்பியுள்ளனர்.
இதனிடையே மைதானத்திற்கு வெளியே தமிழீழ தேசியக் கொடி பட்டொளி வீசிப்பறக்க கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழ் உறவுகள், சிங்களத்தின் தேசியக் கொடியாகிய சிங்கக் கொடியை வீதியில் வீசியெறிந்தும், காலால் மிதித்தும் தமது எதிர்ப்பைக் காண்பித்துள்ளனர்.
இதேநேரத்தில் ஈழத்தமிழ் போராட்டவாதிகளை தாக்க முற்பட்ட சிங்களக் காடையர்கள் சிலர் அங்கு நின்ற தமிழ் இளைஞர்கள் சிலரால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.