தமிழக அரசு அவசர ஆலோசனை!

நெல்லை: கூடங்குளம் பகுதி மக்களுக்கு ரூ500 கோடியில் திட்டங்களை செயல்படுத்த, முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக 9 கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் கலெக்டர் செல்வராஜ் அவசர ஆலோசனை நடத்தினார். 8 ஆயிரம் குடிசைகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த 19ம் தேதி முதல் முழுவீச்சில் பணிகள் நடந்து வருகின்றன. கூடங்குளம் சுற்று வட்டார கிராமங்களுக்கு ரூ500 கோடியில் நலத் திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முதல் கட்டப் பணிகள் நெல்லையில் நேற்று தொடங்கின. இந்த திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக கலெக்டர் செல்வராஜ் 9 கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அமானுல்லா, உதவி இயக்குநர் (பஞ்சாயத்து)வீரபத்ரன், ப¤டிஒக்கள் வள்ளியூர் முத்துலெட்சுமி, ராதாபுரம் நடராஜன், முத்துசாமி (பஞ்சாயத்து), கிராம பஞ்சாயத்து தலைவர்கள் இருக்கன்துறை சுதந்திரவேல், உவரி தேம்பாவணி, செட்டிகுளம் பெர்சியாள் விஜயன், கரைச்சுத்து உவரி ஆறுமுகராஜன், லெவிஞ்சிபுரம் மணிவர்ணபெருமாள், உதயத்தூர் முத்துவேல், திருவம்பலபுரம் அன்சாப்பி, குட்டம் மகேஷ், பரமேஸ்வரபுரம் பஞ்சாயத்து தலைவர் சார்பில் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வள்ளியூர், ராதாபுரம் பஞ்சாயத்து யூனியன்களுக்கு உட்பட்ட 11 கிராம பஞ்சாயத்துகளிலும் உள்ள 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் குடிசை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். உவரியில் கடல் அரிப்பு உள்ளதால் அந்த பகுதியில் தூண்டில் வளைவு, மீனவர்கள் வலைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு மீன் வலை கூடங்கள்,

மீன்களை பதப்படுத்த குளிர் சாதன கிடங்கு, ஆரம்ப சுகாதார நிலையம், சாலை வசதிகள், குடிநீர் போன்ற திட்டங்கள் செய்து தரப்பட உள்ளது. எனவே அந்தந்த பஞ்சாயத்துகளில் என்னென்ன வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து வருகிற 27ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். விரைவில் அறிக்கை: இந்த கூட்டம் குறித்து செட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் பெர்சியாள் விஜயன் கூறுகையில், தமிழக அரசு ரூ500 கோடியில் திட்டங்களை கூடங்குளம் பகுதி மக்களுக்கு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் மீனவ க¤ராமங்களுக்கு குடிநீர், சாலை வசதிகள், பாலம் செய்து தருமாறு கேட்டுள்ளோம். இதுகுறித்து கணக்கெடுத்து விரைவில் அறிக்கை அளிக்கப்படும் என்றார். குடிநீர் பிரச்னை: லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து தலைவர் மணிவர்ணபெருமாள் கூறுகையில், ‘விளையாட்டு மைதானம், குடிநீர் வசதிகள் செய்து தருமாறு கேட்டுள்ளோம். பஞ். பகுதியில் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி நடப்பதால் 2 காற்றாலைகள் அமைத்து தருமாறு கூறியுள்ளோம். பேச்சிப்பாறை அணையின் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. குளங்களை ஆழப்படுத்தி பேச்சிப்பாறை அணையில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை கொண்டு வந்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். குடிநீர் பிரச்னை தீரும், விவசாய தேவைக்கு தண்ணீர் கிடைக்கும் என தெரிவித்துள்ளோம் என்றார். இந்த கூட்டத்தில் கூடங்குளம், விஜயாபதி பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. வரும் 27ம் தேதிக்குள் பஞ்சாயத்துகளிடம் இருந்து அறிக்கையை பெற்று திட்டங்களை விரைவில் செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.