வட மாகாணசபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் கைதடியில் இந்த அமர்வு நடைபெறவுள்ளது. அமர்வுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இதுவரையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளாத உறுப்பினர்கள் அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிசாளர்இ பிரதி தவிசாளர் தெரிவுஇ வட மாகாணசபையின் ஆரம்ப அமர்வுகளின் போது நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. முதலாம் அமர்வுகளில் வட மாகாண ஆளுனர் பங்கேற்பாரா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.












Leave a Reply