முதற்சுற்றின் மொத்தப் புள்ளிகளுடன் புளூஸ்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 04 /12 /2011 அன்று நடைபெற்ற முதலாம் சுற்றின் இறுதிப் போட்டியில் வல்வை புளூஸ் அணி ஈஸ்ட் லண்டன் எலைட் அணியை எதிர்த்து மோதியிருந்தது. இதில் வல்வை புளூஸ் அணி 2 -1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஈஸ்ட் லண்டன் எலைட் அணியை தோற்கடித்து முதலாம் சுற்றின் அனனத்து போட்டிகளையும் வென்று சாதனை படைத்துள்ளது.
இன்றைய போட்டியில் இடைவேளைக்கு முதலாகவே இரண்டு கோல்களையும் போட்டிருத்தது. முதலாவது கோலை அணித்தலைவர் சாமும் இரண்டாவது கோலை மயூரனும் போட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் சில சந்தர்பங்கள் கோல் கம்பத்திலும் மோதி திரும்பின. ஆட்டத்தின் முடிவுக்கு அண்மையாக கோலை போட்ட ஈஸ்ட் லண்டன் எலைட் அணி தொடர்ந்தும் ஒரு கோலை போட்டு எப்படியாவது ஆட்டத்தை சம புள்ளியுடன் முடிக்க முயன்றனர். ஆனால் புளூஸ் அணியின் தொடர் எதிர்ப்புகளினால் அவர்களின் முயற்சி கைகூடவில்லை.
இதனை தொடர்ந்து புளூஸ் அணி தொடர்த்தும் முதலாம் இடந்தில் இருக்கின்றது. எதிர்வரும் ஞாயிறு 11 /12 /2011 அன்று இரண்டாம் சுற்றில் மீண்டும் நோர்த் வெஸ்ட் லண்டன் அணியை எதிர்த்து மோதுகின்றது. அட்கனவே முதலாம் சுற்றில் நோர்த் வெஸ்ட் லண்டன் அணியை எதிர்த்து மோதி 3 -2 என்ற கோல்களின் அடிப்படையல் வெற்றிபெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.