கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 /12 /2011 இடம்பெற்ற போட்டியில் இரண்டாம் முறை சென் அன்டனிஸ் கழகத்தை எதிர்த்து மோதிய வல்வை புளூஸ் கழகம் 4 -1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கடந்த வாரம் 11 /12 /11 அன்று இடம்பெற்ற போட்டியில் 1 -0 என்ற கோல் வித்தியாசத்தில் நோர்த் வெஸ்ட் லண்டன் அணியிடம் தோல்வியுற்றது . அவர்களே இந்தவருடம் புளூஸ் அணிக்கு பின் இரண்டாம் இடத்தில் இருக்கிண்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த வார அதிர்ச்சித் தோல்வியை தொடர்ந்துஅதிலிருந்து மீன்று மறுபடியும் வெற்றிப்பாதையில் பயணிக்கவேண்டுமென்று வீறுடன் விழயாடிய வல்வை புளூஸ் எதிர்பாராத விதமாக ஒரு கோலைவாங்கியது.
இடைவேளையின் போது 1 -0 என்ற கோல் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்த புளூஸ் இடைவேளைக்கு பின் 4 கோல்களை அடித்து போட்டியைஇலகுவாக வென்றது. இன்றைய போட்டியில் அணித்தலைவர் சாம் இரண்டு கோல்களையும், நிவாசர், சாரு ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும் போட்டுபுலூசின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இப்போட்டியுடன் நத்தார் புதுவருட விடுமுறைகள் கழித்து 2012இல் மீண்டும் போட்டிகள் ஆரம்பிக்கும்போது சரே யுனைடெட் அணியை எதிர்த்து மோதவுள்ளது.